• 647-836-0313
  • 4581, 14th Ave, Markham ON, L3S 3K2

வேலையாள் கூலிக்குப் பாத்திரன்

வேலையாள் கூலிக்குப் பாத்திரன்

லூக்கா 10:1-7 இவைகளுக்குப் பின்பு, கர்த்தர் வேறே எழுபது பெரை நியமித்து, தாம் போகும் சகல பட்டணங்களுக்கும் இடங்களுக்கும்அவர்களை தமக்கு முன்னே இரண்டிரண்டு பேராக அனுப்பினார். அனுப்புகிற போது, அறுப்பு மிகுதி, வேலையாட்களோ கொஞசம். எனவே அறுப்புக்கு எஜமான் வேலையாட்களை அனுப்பும்படி வேண்டிக்கொள்ளுங்கள் என்றும், ஆட்டக்குட்டிகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல இதோ நான் உங்களை அனுப்புகிறேன். புணப்பை, சாமான்பை கொண்டுபோக வேண்டாம் என்று சொல்லி, வேலையாள் தன் கூலிக்குப் பாத்திரனாய் இருக்கிறான் என்றார்.

மத்தேயு 10:1-10ல் இயேசு தமது பன்னிரண்டு சீஷர்களை அனுப்பும் போது காணாமற் போன இஸ்ரவேல் வீட்டாரிடத்திற்குப் போங்கள். வியாதியஸ்தர்களை குணமாக்குங்கள். இலவசமாய் பெற்றீர்கள் இலவசமாய் கொடுங்கள் என்றும், உங்கள் கச்சைகளில் பொன்னையாவது, வெள்ளியையாவது, செம்பையாவது, வழிக்காகப் பையையாவது, இரண்டு அங்கிகளையாவது தேடி வை;க வேண்டாம். வேலையாள் தன் ஆகாரத்துக்குப் பாத்திரனாயிருக்கிறான் என்றார். இங்கேயும்இயேசு அந்த பன்னிரண்டு சீஷர்களிடத்தில் ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறது போல உங்களை அனுப்புகிறேன் என்றார்.

மூதலீடு செய்யப்படாது ஆரம்பிக்கப்பட்ட ஊழியம் :

இன்றைக்கு உலகத்தில் எந்த கம்பெனிகளும், ஸ்தாபனங்களும் முதலீடு செய்யாமல் ஒரு தொழிலை துவங்குவதில்லை. நிறைய பணங்களை முதலீடு செய்து கம்பெனியை ஆரம்பிக்கிறார்கள். அதுபோல சில ஸ்தாபனர்களும் அப்படியே செய்கின்றன. ளுலனெiஉயவந என்று பெயர் வைத்து கூட்டாக பலரை சேர்த்து முதலீடு செய்து ஸ்தாபனங்களை ஆரம்பிக்கிறார்கள். சில ஸ்தாபனங்கள் நீண்ட நாட்கள் செயல்படுகின்றன. சில ஸ்தானங்கள் முதலீட்டுக்கு மோசம் வந்து மறைந்து போகின்றன. ஆனால் ஒரு காசு முதலீடு செய்யாமல் ஆரம்பிக்கப்பட்ட ஸ்தாபனம் (ஊழியம்) எதுவென்றால் ஏறக்குறைய 2000 ஆண்டுகளுக்கு முன்பு கர்த்தராகிய இயேசு கிறிஸ்தவால் ஆரம்பிக்கப்பட்ட ஊழியம்தான், இன்று வரையிலும் தொடர்ந்து அழியாமல் வளர்ச்சி பெற்று செயல்பட்டு வருகிறது.

உலகமெங்கும் போய் சர்வ சிருஷ்டிக்கும் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள் என்று சொல்லிவிட்டு அவர் பரலோகம் சென்று விட்டார். ஏதாதவது பணம் கொடுத்து சென்றாரா! அல்லது புதையல் அங்கு இருக்கிறது என்று சொல்லிவிட்டுச் சென்றாரா! எதுவுமில்லை. ஊழியத்தின் ஆரம்பத்திற்கு பணம் தேவை இல்லை என்று அவருக்குத் தெரியும். விசுவாசத்தை முதலீடாக வைத்து தமது ஊழியக்காரர்களை அனுப்பினார். ஆனால் இன்றும் அவரால் துவக்கப்பட்ட ஊழியம் அழிவுபெறாமல் வளர்ச்சியடைந்து வருகிறது. இன்னும் பலுகிப் பெருகும்.

ஓநாய்கள் தான் ஊழியராப் போஷித்தன :

ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல உங்களை அனுப்புகிறேன் என்றார். ஆவர் அனுப்பின காலத்தில் தமது ஊழியர்களை போஷிக்க எந்த விசுவாசிகளும் இல்லை. ஓநாய்கள்தான் மனந்திரும்பி சுவிசேஷத்தை ஏற்றுக்கொண்டு, இNயுசுவால் அனுப்பப்பட்ட ஊழியர்களை போஷித்தன.

வேலை தேவை

விசுவாசத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ஊழியத்திற்கு தேவை வேலை. வேலைதான் முக்கியம். ஏதோ ஒன்று இருந்தால்தான் ஆரம்பிக்க முடியும் என்று நினைக்க வேண்டாம். பணம் முக்கியமல்ல, படிப்பு முக்கியமல்ல, விசுவாசமும், வேலையும்தான் முக்கியம்.

மத்தேயு 20ம் அதிகாரத்தில் ஒரு திராட்சத்தொட்ட எஜமான், தன் தோட்டத்தில் வேலைசெய்வதற்கு வேலையாட்களை அமர்த்த அதிகாலையில் புறப்பட்டுப்போய் காலை மூன்றாம் மணி, ஆறாம், ஒன்பதாம் மணிவேளைகளிலும் வேலையாட்களுக்கு கூலி பேசி வேலைக்கு அமர்த்தினான். பதினோராம் மணி வேளையிலும் கூலி பேசி வேலையாட்களை அமர்த்தினான். அவன் நியாயமானபடி நாளொன்றுக்கு ஒரு பணம் கூலி பேசி அமர்த்தினான். சாய்ங்காலத்திலே அந்த எஜமான் தன் காரியக்காரனிடத்தில் பிந்திவந்தவர்கள் தொடங்கி (11ம் மணி வேளையில் வந்தவர்கள் – மாலை 5 மணி) முந்தி வந்தவர்கள் வரைக்கும் ஒரு பணம் கூலி கொடுக்கும்படி சொன்னான். பிந்தி வந்தவர்கள் ஒரு பணம் வாங்கிச் சென்றார்கள். முந்தி வந்தவர்கள் தங்களுக்கு அதிகப்பணம் கிடைக்கும் என்று நினைத்து வந்த போது ஒரு பணம்தான் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது. முந்திவந்தவர்கள் முறுமுறுத்து, பகலின் கஷ்டத்தையும், வெயிலின் உஷ்ணத்தையும் சகித்த எங்களை பிந்திவந்தவர்களுக்கு சமமாக்கினீரே என்று கூப்பாடு போட்டார்கள். அப்போது எஜமான் “நீ எனக்கு சம்மதித்ததை வாங்கிக்கொள்” என்று அனுப்பினான். ஆனால் வேதவசனத்தை கூர்ந்து கவனித்துப் பார்த்தால், அவர்கள் வெயிலின் உஷ்ணத்தை சகித்தார்கள், பகலின் கஷ்டத்தை சகித்தார்கள். ஆனால் வேலை செய்யவில்லை. தேவன் நம்மிடம் எதிர்பார்ப்பது என்ன? வேலை செய்கிறதைத்தான் எதிர்பார்க்கிறார். அதற்கேற்ற நியாயமான கூலியையும் தேவனே கொடுக்கிறார். வேலையாள் (உண்மையாய் வேலை செய்கிறவன்) கூலிக்கு பாத்திரனாய் இருக்கிறான்

குறைவே இல்லை என்று சொல்லுகிற வேலையாள், உண்மையானவன் :

ஆண்டவர் ஆட்களை அனுப்பினபோது பணப்பை கொடுக்கவில்லை, சாமன்பை கொடுக்கவில்லை, பாதரட்சைகள்கூட கிடையாது. ஆண்டவர் தம்முடைய சீஷர்களை நோக்கி: “நான் உங்களைப் பணப்பையையும், சாமான் பையையும், பாதரட்;சைகளும் இல்லாமல் அனுப்பினபோது, ஏதாகிலும் குறைவாய் இருந்ததா என்று கேட்டார். அவர்கள் ஒன்றும் குறைவாய் இருந்ததா என்று கேட்டார். அவர்கள் ஒன்றும் குறைவாய் இருந்ததில்லை” என்று உண்மை மனதுடன் சொன்னார்கள். நிச்சயமாக இது நமது கண்களுக்கு ஆச்சரியமாய் இருக்கிறது. பணம் இல்லை, சாமான்மைபை இல்லை, ஆகாரத்திற்காக ஒன்றும் கொண்டுபோகவில்லை. ஆனாலும் அந்த சீஷர்கள் சொல்லுகிறார்கள் : ஒன்றும் குறைவாய் இருந்ததில்லை என்று! அன்பானவர்களே! இப்படித்தான் நாம் சொல்ல வேண்டும். 40 ஆண்டுகள் தமது ஜனங்களை வனாந்தரத்தில் போஷித்தாரே! அதே ஆண்டவர்தான் இன்றும் நம்மைப் போஷித்து நம்முடைய விசுவாசத்தை வர்த்திக்க பண்ணுவதற்கே, தேவன் நம்மை வெறுமையாக அனுப்புகிறார்.

எப்படிப்பட்ட வேலைக்காரனாய் இருக்க வேண்டும் :

கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரன் : ஒரு நூற்றுக்கதிபதி, திமிர்வாத நோயினால் அவதிப்பட்ட தன் வேலைக்காரனுக்காக ஆண்டவரிடத்தில் கூறும்போது “எனக்கு கீழ்ப்பட்டிருக்கிற சேவகருமுண்டு, நான் ஒருவனைப்போ என்றால் போகிறான். வுh என்றால் வருகிறான். இதைச் செய் என்றால் செய்கிறான் என்றான்.” இதிலிருந்து நாம் தெரிந்து கொள்வது என்னவெனில் தன் எஜமான் சொல்லுகிற கட்டளைகளுக்கு முழுவதுமாக கீழ்ப்படிந்தவனாய் இருக்கிறான். கானாவூர் கலியாணத்தில் திராட்சரசம் குறைவுபட்ட போது, இயேசுவின் தாயார் வேலைக்காரரிடத்தில், அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ அதின்படி செய்யுங்கள் என்றார். இயேசு, அந்த கால் கழுவுகிற இடத்தில் வைக்கப்பட்டுள்ள ஆறு கற்சாடிகளில் தண்ணீர் நிரப்புங்கள் என்றார். அந்த வேலைக்காரர்களும் ஒன்றும் முறுமுறுக்காமல் அதின்படி செய்தார்கள். தண்ணீர் இரசமாக மாறினது கூட அவர்களுக்கு தெரியாது, நாம் கழுவுகிற சாடிகளில் தண்ணீரை நிரப்பலாமா என்று எதிர்கேள்விகள்கூட அவர்கள் கேட்கவில்லை. அன்பானவர்களே, ஆண்டவர் உங்களுக்கு சொன்ன காரியத்தில் எதிர்பேசாமல் அவர் சொன்னபடி அப்படியே செய்கிறவன்தான் கீழ்ப்படிதலுள்ள வேலைக்காரன். ஏலியா தீர்க்கதரிசியை தேவன் கேரீத் ஆற்றண்டையில் ஒளித்து வைத்தார். ஆகாரமும், தண்ணீரும் கொடுத்தார். தண்ணீர் வற்றினபோது, சாறிபாத் ஊர் விதவையண்டைக்கு போ என்றார். அவர் சொன்னபடி அவன் செய்தான். முறுமுறுக்கவில்லை. விதவையால் போஷிக்கப்பட்டார் எலியா தீர்க்கதரிசி.

அனுப்பப்படும் ஊழியக்காரனாய் இருக்கவேண்டும் :

மத்தேயு 10:5ல் இந்தப் பன்னிருவரையும் இயேசு அனுப்புகையில், …. இந்த வசனத்தின் மூலம், வேலையாட்கள் தேவனால் அனுப்பப்படும் ஊழியர்களாய் இருக்க வேண்டும் என்று அறிந்து கொள்கிறோம். தேவனால் அனுப்பப்பட்டவர்களாய் இருந்தால் அவர்களிடத்தில் தேவனுடைய கட்டளை இருக்;கும். “உங்களிடத்தில் தீமோத்தேயுவை அனுப்பலாமென்று இருக்கிறேன். உங்கள் காரியத்தை உண்மையாய் விசாரிப்பதற்கு என்னைப்போல மனதுள்ளவன் அவனையன்றி வெறொருவனும் இல்லை. தகப்பனுக்கு பிள்ளை ஊழியம் செய்வது போல அவன் என்னுடனே கூட சுவிசேஷத்தினிமித்தம் ஊழியம் செய்தானென்று அவனுடைய உத்தம குணத்தை அறிந்திருக்கிறேன்” என்று பவுல் பிலிப்பியருக்கு எழுதுகிறார். அனுப்பப்படும் ஊழியன் எஜமானனுக்கு நம்பிக்கையுள்ளவனாய் இருப்பான். ஆபிரகாம், ஈசாக்கிற்குப் பெண்பார்ப்பதற்கு எலியேசர் என்ற தன்னுடைய ஊழியக்காரனை நம்பி 10 ஒட்டகங்கள், விலையுயர்ந்த பொருட்கள் பெண் வீட்டாருக்கு அனுப்புகிறான். ஏன்? எலியேசர் தன் எஜமானனாகிய ஆபிரகாமின் நம்பிக்கைக்குப் பாத்திரனாய் இருந்தான். நாமும் அதுபோல் நம் எஜமானனின் நம்பிக்கைக்குப் பாத்திரவான்களாய் இருக்க வேண்டும்.

சபைக்கு செய்தி (தூது) கொடுக்கிறவனாக இருக்க வேண்டும் :

வெறும் பிரசங்கமாய் இருக்க கூடாது. தேவனிடத்தில் பெற்ற செய்தி, வேலையாளிடத்தில் இருக்க வேண்டும். தாவீதின் குமாரனாகிய அப்சலோம் மரித்துப்போன செய்தியை தாவீதிற்கு தெரிவிக்க யோவாப், கூஷ் என்பவனிடத்தில் கண்டதை ராஜாவுக்கு அறிவி என்று அவனை அனுப்பினான். ஆனால் ஆகிமாஸ் என்பவன் முந்திக்கொண்டு நான் போய் சொல்லுகிறேன் என்றான். ஆதற்கு யோவாப், வேண்டாம் உன்னிடத்தில் நல்ல செய்தி இல்லை என்றான். ஆனாலும் அகிமாஸ் முன்னதாக ஓடி ராஜாவினிடத்தில் நின்றான். ராஜா அவனிடம் “பிள்ளையாண்டான் அப்சலோம் சுகமாய் இருக்கிறானா? ஏன்று கேட்டதற்கு, அகிமாஸ் பெரிய சந்தடி நிமித்தம் அதைக்குறித்து தெரியாது” என்றான். ராஜா அவனை ஓரத்தில் நிற்க வைத்தான். அன்பானவர்களே, நாம் செய்தி இல்லாமல் சபை மேடையில் நிற்பது சரியல்ல. தேவனிடத்தில் காத்திருந்து செய்தியை பெற்றுக்கொள்வதில்லை. காலையில் எழும்புங்கள், தேவனே உங்களை எழுப்பி செய்தி கொடுப்பார்.

“இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல, நான் அறியும்படிக்கு கர்த்தராகிய ஆண்டவர் எனக்கு கல்விமானின் நாவைத் தந்தருளினார் காலை தோறும் எழுப்புகிறார், கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல நான் கேட்கும்படி என் செவியை கவனிக்கச் செய்கிறார்” (ஏசாயா 50:4) என்ற வாக்குத்தத்தம் நமக்கு உரியதாய் இருக்கிறது.

கண்ணீரோடு விதைக்கிறவன் நல்ல வேலையாள் :

“கண்ணீரோடு விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடு அறுப்பார்கள்” (சங் 126:5). அள்ளித்தூவும் விதையை சுமக்கிறவன் அழுதுகொண்டு போகிறான் அறுத்த அரிகளை சுமந்து கொண்டு கெம்பீரத்தோடே வருகிறான்.” நேல் விதையை மூடைகளில் கட்டி தண்ணீரில் ஊறப்போட்ட பின்பு அதை விதைப்பார்கள். அது அதிக நாற்றுக்களைக் கொடுக்கும். அதுபோல தேவவசனத்தை கண்ணீரினால் நனைத்து விதைத்துப் பாருங்கள். அறுவடை அதிகமாக இருக்கும். ஒரு மிஷினரி சீனா தேசத்திலே சென்று சுவிசேஷத்தைப் பிரசங்கித்தார். இரண்டு மூன்று ஆண்டுகளாகியும் பலன் இல்லை. தமது ஊருக்கு திரும்புவதற்கு தன்னை அனுப்பிய ஸ்தாபனத்திற்கு கடிதம் எழுதினார். அவர்கள் அவருக்கு எழுதின கடிதத்தில் “வுசல வுநயசள – கண்ணீருக்கு முயற்சியுங்கள்” என்று எழுதியிருந்தனர். இவர் கண்ணீர்விட்டு பிரயாசப்பட்டார். கண்ணீரோடு விதைத்தார். ஆத்துமாக்கள் பெருகின.

வேலைக்காரன் கண்கள் எஜமானனின் கையை நோக்கிக் கொண்டிருக்க வேண்டும் சங் 123:2 “இதோ வேலைக்காரரின் கண்கள் தங்கள் எஜமான்களின் கையை நோக்கி இருக்குமாப்போல … எங்கள் கண்கள் அவரை நோக்கி இருக்கிறது.” ஆம் அன்பானவர்களே பிறருடைய கையை எதிர்பார்க்கிறதை விட தேவனின் கரத்தை எதிர்பார்க்கிறது தான் வேலையாளின் நோக்கமாய் இருக்கவேண்டும். எஸ்றா தேவனின் கரத்தை நோக்கி இருந்தான். “அவனுடைய தேவனுடைய கரம் அவன் மேலிருந்ததினால், அவன் கேட்டதெல்லாம் ராஜா அவனுக்கு கொடுத்தார்” (எஸ்றா 7:6) என்று வேதவாக்கியம் உள்ளது.

அன்பானவர்களே, வேலையாள் கீழ்ப்படிதலுள்ளவனும், தேவனால் அனுப்பப்பட்டவனும், கண்ணீரோடு விதைக்கிறவனும், தேவனுடைய கரத்தை நோக்கிப் பார்க்கும்படி இருக்கவேண்டும். வேலையாள் நியாயமான கூலிக்குப் பாத்திரன். நிச்சயமாக இந்த வாக்குத்தத்தம் நமக்குள் நிறைவேறிக் கொண்டிருக்கிறது. முதலீடு செய்யப்படாமல், இயேசுவால் துவக்கப்பட்ட ஊழியம் உங்களாலும், உங்கள் சந்ததிகளாலும் நிச்சயம் வளர்ச்சி பெறும். சுமாதானத்தின் தேவன் நம்மோடிருப்பாராக !

Leave a Reply

All copyrights reserved © 2017 - Design & Development by Toronto Dial