About Our Church

தேவனுடைய கிருபையால் 2001ம் ஆண்டு மார்க்கம் பிரதேசத்தில் தேவநாமத்தை மகிமைப்படுத்தும்படியாக மிகுந்த ஜெபத்துடனும் பிரயாசத்துடனும் தமிழ்த் திருச்சபை ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.

“நான் உங்களோடு இருக்கிறேன்” என்று வாக்குத்தத்தம் பண்ணின தேவன் ஆவியானவரின் அசைவினால் கர்த்தர்தாமே சபையை ஜனங்களுக்கு அடையாளம் காட்டி, கட்டி எழுப்பினதும் அல்லாமல் தேவன் விளைச்சலையும் கட்டளையிட்டார்.

காலம் நிறைவேறின போது சோதனைகள் வந்தது, வேதனைகள் வந்தது, மனம் தளர்ந்துபோகும் வேளையில் “மார்க்கம் கிறிஸ்தவ ஆராதனை ஸ்தலமும்” மலர்ந்தது.

“உன் வெளிச்சத்தினிடத்திற்கு ஜாதிகளும் உதிக்கிற உன் ஒளியினிடத்திற்கு ராஜாக்களும் நடந்து வருவார்கள” ஏசாயா 60:03 என்ற பிரகாரமாக MCEC (Mennonite Church Eastern Canada) யுடன் இணைந்து சபை எழுந்து பிரகாசிக்கவும் தேவனின் நாமம் மகிமையடையும்படியாகவும் கிருபை செய்தார்.

தேவனின் நாமம் ஒன்றே மகிமையடைவதாக.

 

Our Mission

1. எம்மை அறிந்தவர்கள் எல்லோருமே இயேசுவையும் அறிந்திருக்க வேண்டும் .
2. தமக்கென்று மட்டுமல்ல இயேசுவுக்கென்றும் வாழுபவர்களை உருக்க வேண்டும்.
3. தேவனை அவருடைய சித்தத்தை சரியாக அறிந்து அறிவிப்பது.
4. ஊழியங்களை உருவாக்கவேண்டும், ஊழியருக்கு உதவி செய்ய வேண்டும்.
5. ஆவியானவருக்கு இடம் கொடுத்து தேவனுடைய வார்த்தைக்கு சாட்சியாக வாழ வேண்டும்.
6. இளம் தலைமுறையினரை தேவனுடைய கிருபையைப் பெற ஊக்குவிக்க வேண்டும்.
7. பத்திரிகை ஊழியம், தனிநபர் ஊழியம் ஆகிய சுவிசேஷ ஊழியங்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
8. ஆவியின் வரங்களை சபையில் அனல்மூட்டி எழுப்பவேண்டும் .
9. ஒவ்வொரு விசுவாசியையும் ஊழியம் செய்பவர்களாய் உருவாக்க வேண்டும்.
10. விசுவாச வாழ்க்கை வாழ சபையை வழி நடத்துதல்.

Our Vision

1. எமது சபைக்கென்று ஓர் விசுவாச வீட்டை உருவாக்குதல் .
2. நாள் முழுவதும் துதிக்கின்ற ஒரு கூட்டம் சனத்தை உருவாக்குதல் .
3. தமிழர்கள் மத்தியில் மனோநைற் சபையை அறிமுகப்படுத்துதல் .
4. அனபெப்தீஸ் அறிவுள்ள ஒரு போதகரை எங்கள் மத்தியில் உருவாக்குதல்.
5. கனடா, இலங்கை, தென் இந்தியாவிலும் சபைகளை உருவாக்குதல் மற்றும் உதவி செய்தல்.
6. தரிசனங்களோடு வாழ்வதற்கு சபையைப் படிப்பித்தல் பலப்படுத்துதல்.
7. இலவசமாக எம்மால் இயன்றவரை எல்லோருக்கும் இயேசுவை அறிவித்தல்.

Our Pastors